UA-201587855-1 Tamil369news ‘துரோகமும், துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன..’ - சிம்புவின் 'பத்து தல' ட்ரெய்லர் எப்படி?

‘துரோகமும், துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன..’ - சிம்புவின் 'பத்து தல' ட்ரெய்லர் எப்படி?

நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சுமார் 2.16 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர். இந்தப் படத்தில் சிலம்பரசன், ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரை பார்க்கும் போது அவரது பாத்திரம் ஆன்டி ஹீரோ என தெரிகிறது.

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை