UA-201587855-1 Tamil369news ‘பொன்னியின் செல்வன் 2' அதிகாலை சிறப்பு காட்சி இல்லை

‘பொன்னியின் செல்வன் 2' அதிகாலை சிறப்பு காட்சி இல்லை

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2 ம் பாகம் இன்று வெளியாகிறது.

முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு. ஆனால், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் அனுமதியின்றி காட்சிகள் திரையிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்துக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்காதது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை