ஐபிஎல் 16வது சீசன் பரபரப்பாக நடந்துவருகிறது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 7 ரன்களில் வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 49 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
நடப்பு தொடரில் சிஎஸ்கே பெறும் 5வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்