UA-201587855-1 Tamil369news ‘புஷ்பா 2’ அப்டேட்: ஃபஹத் பாசிலுக்கான படப்பிடிப்பு நிறைவு

‘புஷ்பா 2’ அப்டேட்: ஃபஹத் பாசிலுக்கான படப்பிடிப்பு நிறைவு

அல்லு அர்ஜூன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபஹத் பாசிலுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புஷ்பா: தி ரைஸ்’. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகமான இந்தப்படம் தென்னிந்தியாவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுமட்டுமல்லாமல் வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தியது. திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு, அதன் அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்புகளையும் அதிகரித்தது. அந்த வகையில் ’புஷ்பா: தி ரூல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை