UA-201587855-1 Tamil369news காதலியை கரம் பிடிக்கிறார் நடிகர் சர்வானந்த் - ஜூன் 3ல் ஜெய்ப்பூரில் திருமணம்

காதலியை கரம் பிடிக்கிறார் நடிகர் சர்வானந்த் - ஜூன் 3ல் ஜெய்ப்பூரில் திருமணம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான சர்வானந்த், தமிழில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘கணம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது 38 வயதாகும் சர்வானந்த் அவரது காதலியை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களின் திருமணம் ஜூன் 3ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் தான் இவர்களின் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இந்தநிலையில் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். அவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் அனுமதி உடன் திருமணம் நடக்கவிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை