UA-201587855-1 Tamil369news காவல்துறையினர் எல்லை மீறி நடந்துகொண்டனர்; பதக்கம், விருதுகளை திருப்பி கொடுப்போம் - மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர்மல்க வேதனை

காவல்துறையினர் எல்லை மீறி நடந்துகொண்டனர்; பதக்கம், விருதுகளை திருப்பி கொடுப்போம் - மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர்மல்க வேதனை

புதுடெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜந்தர் மந்தர் பகுதியில் மழை பெய்ததால் வீரர், வீராங்கனைகள் ஏற்கெனவே பயன்படுத்திய படுக்கைகள் நனைந்திருந்தன.

இதனால் இவற்றுக்கு மாற்றாக சில படுக்கைகள் மற்றும் மர பெஞ்ச்களை கொண்டுவர முயன்றனர். அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த போலீஸார், இந்த படுக்கைகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் சோம்நாத் பார்தி அனுப்பி வைத்துள்ளார். இந்த பொருட்களை போராட்ட பகுதிக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை