UA-201587855-1 Tamil369news கேமரூன் கிரீன், ஆகாஷ் மத்வால் அபாரம்: எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியது மும்பை

கேமரூன் கிரீன், ஆகாஷ் மத்வால் அபாரம்: எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியது மும்பை

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் அந்த அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியானது, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா 11, இஷான் கிஷன் 15 ரன்களில் வெளியேறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை