UA-201587855-1 Tamil369news IPL 2023 | 2 முறை தப்பித்த கில் - மும்பை அணியை குஜராத் வீழ்த்தியது எப்படி?

IPL 2023 | 2 முறை தப்பித்த கில் - மும்பை அணியை குஜராத் வீழ்த்தியது எப்படி?

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று-2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.ரித்திமான் சாஹா 16 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் பியூஸ் சாவ்லா பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லுடன் இணைந்து ரித்திமான் சாஹா 6.2 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை