UA-201587855-1 Tamil369news IPL 2023 | பெங்களூரு அணியின் பிளே ஆஃப் கனவு கைகூடுமா?

IPL 2023 | பெங்களூரு அணியின் பிளே ஆஃப் கனவு கைகூடுமா?

பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடரின் கடைசி லீக் போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 702 ரன்கள் வேட்டையாடி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேவேளையில் விராட் கோலி 538 ரன்கள் சேர்த்து 5-வது இடத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை