UA-201587855-1 Tamil369news தீராக் காதல் Review: துரத்தும் முதல் காதலில் கிட்டியதா உணர்வுபூர்வ அனுபவம்?

தீராக் காதல் Review: துரத்தும் முதல் காதலில் கிட்டியதா உணர்வுபூர்வ அனுபவம்?

காதலிக்கும் அனைவருக்குமே அந்தக் காதல் திருமணத்தில் போய் முடிவதில்லை. அப்படி சேராத காதல்கள் இருவேறு திசைகளில் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அதுவே ‘தீராக் காதல்’. திருமணத்துக்குப் பிந்தைய காதலையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் கதைக்களமாக கொண்டு வெளியாகியுள்ள இப்படம் ஒரு சினிமாவாக பார்வையாளர்களை ஈர்த்ததா?

சென்னையில் உள்ள ஓர் உயர் நடுத்தர வர்க்க குடியிருப்பில் மனைவி, குழந்தை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கௌதம் (ஜெய்). அலுவலக நிமித்தமாக மங்களூருக்கு ரயிலில் செல்ல வேண்டிய சூழல் வருகிறது. நள்ளிரவில் டீ குடிக்க ஒரு ஸ்டேஷனில் இறங்கும்போது அங்கு தனது முன்னாள் காதலியான ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) யதேச்சையாக சந்திக்கிறார். ஆரண்யாவும் மங்களூருக்கு செல்வதாக கூறுகிறார். பல வருடங்களுக்குப் பிறகான அந்தச் சந்திப்பில் இருவரும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களது சந்திப்பு மங்களூருவிலும் தொடர்கிறது. தனது கணவன் தன்னை தினமும் அடித்து கொடுமைப்படுத்துவதை தனது முன்னாள் காதலன் கௌதமிடம் சொல்கிறார் ஆரண்யா. அந்த ஒருவார காலமும் இருவரும் தங்கள் சொந்தப் பிரச்சினைகளை மறந்து காதல் வானில் சிறகடிக்கின்றனர். தன்னுடைய மனைவி வந்தனா (ஷிவதா) எந்நேரமும் அலுவலக பணியிலேயே மூழ்கியிருப்பதால் ஆரண்யாவின் வருகையில் கௌதமும் ஆறுதலை உணர்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை