UA-201587855-1 Tamil369news ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழைவது யார்? - குஜராத் vs மும்பை இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழைவது யார்? - குஜராத் vs மும்பை இன்று பலப்பரீட்சை

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிளே ஆஃப்பின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சிஎஸ்கேவிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை சொந்த மண்ணில் விளையாடுவதால் குஜராத் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கக்கூடும்.

15 ஆட்டங்களில் 55.53 சராசரியுடன் 2 சதங்கள், 4 அரை சதங்கள் உட்பட 722 ரன்களை வேட்டையாடி உள்ள ஷுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடும். அதேவேளையில் 12 ஆட்டங்களில் 301 ரன்கள் சேர்த்து சில பயனுள்ள பங்களிப்புகளை வழங்கிய விஜய் சங்கரும் சவால் அளிக்கக்கூடும். இவர்கள் இருவரும் லீக் சுற்றின் இறுதிப் பகுதியில் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தனர். எனினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். இதனால் இலக்கை துரத்திய குஜராத் அணி கரைசேராமல் போனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை