UA-201587855-1 Tamil369news BAN vs AFG | ஆபகனஸதனகக 662 ரனகள இலகக

BAN vs AFG | ஆபகனஸதனகக 662 ரனகள இலகக

டாக்கா: டாக்கா டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.

இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 382 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 146 ரன்கள் விளாசினார். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 80 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 425 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை