UA-201587855-1 Tamil369news கரககட உலகன சறநத ஓபபனரகளல ஒரவர: சனத ஜயசரய பறநதநள சறபபப பகரவ!

கரககட உலகன சறநத ஓபபனரகளல ஒரவர: சனத ஜயசரய பறநதநள சறபபப பகரவ!

கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா. அவருக்கு இன்று பிறந்தநாள். அவரது அதிரடி பேட்டிங் திறன் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிவர். தன் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் பந்து வீசி விக்கெட்டையும் வீழ்த்துபவர். ரிச்சர்ட்ஸ், சச்சினை அடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் எனும் பெயரை பெற்ற வீரர். இதே நாளில் கடந்த 1969-ல் இலங்கையில் அவர் பிறந்தார்.

1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இவரது பங்கு பிரதானமானது. அதே போல் 2007 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2009 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் விளையாடியவர். கடந்த 2011-ல் ஓய்வு பெற்றார். தனது அதிரடி பேட்டிங்கின் ஊடாக ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை