UA-201587855-1 Tamil369news உணர்வுக் கடத்தலை மௌன ராகங்களாக்கிய மணிரத்னம் - இளையராஜா கூட்டணி | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

உணர்வுக் கடத்தலை மௌன ராகங்களாக்கிய மணிரத்னம் - இளையராஜா கூட்டணி | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படங்களின் பட்டியலும், மறக்க முடியாத பாடல்களின் வரிசைப்படுத்துதலும் இயக்குநர் மணிரத்னம் - இசைஞானி இளையராஜா இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் இல்லாமல் முழுமை பெறாது. மணிரத்னம் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் இருந்து 'ரோஜா' திரைப்படத்துக்கு முன்பு வரை அவரது அனைத்துப் படங்களுக்கும் தனது இசையால் அழகைக் கூட்டியவர் இளையராஜா. இருவரும் இணைந்து தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு என 10 என்ற எண்ணிக்கையில்தான் இணைந்து பணியாற்றினர். ஆனால், அந்தப் படங்கள் அனைத்துமே சினிமாவின் உச்சம் தொட்ட படைப்புகள்.

பாலச்சந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகின் மிகப்பெரிய ஆளுமைகள் ஒருபக்கம், பாரதிராஜாவின் உதவி இயக்குநர்கள், புதிய இயக்குநர்களின் படை ஒருபக்கம் என தமிழ் சினிமாவின் வசந்த காலம் வளமாக இருந்தாலும், தொடர்ந்து ஐரோப்பிய பாணியில் பயணித்த தமிழ் சினிமாவுக்கு மாற்று தேவையென உணரப்பட்ட காலம் அது. அதிலும் குறிப்பாக நகரமயமாதலின் சாயலோ, நகரங்கள், நகரத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் குறித்த பதிவுகள் பெரிதும் இல்லாமல் கிராமங்களையும், குடும்பங்களையும், கதைக்களமாகக் கொண்டு அங்கு வசிக்கும் பிரதான கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி நகரும் கதைகளே அதிகமாக வந்துகொண்டிருந்தன. இதனால் கிராமத்து கதை, இளையராஜா இசை என்பதுதான் அதுவரை கோடம்பாக்கத்தின் வெற்றி சூத்திரமாக இருந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை