கல்கரி: கனடாவின் கல்கரி நகரில் கனடா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணை எதிர்த்து விளையாடினார். இதில் லக்‌ஷயா சென் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சாய் பிரணீத் 12-21, 17-21 என்ற நேர் செட்டில் பிரேசிலின் கோயல்ஹோவிடம் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் தலியாவை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-16, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் சிந்து, ஜப்பானின் நட்சுகி நிடைராவுடன் மோதுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்