UA-201587855-1 Tamil369news அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார் சமந்தா

அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார் சமந்தா

சென்னை: நடிகை சமந்தா, விஜய்தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. அடுத்து ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரில் நடித்து வந்த அவர், அதன் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். அவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சை எடுத்தும் முழுவதும் குணமாகவில்லை.

இதனால் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை