UA-201587855-1 Tamil369news பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து - ஸ்பெயின், சுவிட்சர்லாந்து வெற்றி: கனடா வெற்றியை தடுத்தது நைஜீரியா

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து - ஸ்பெயின், சுவிட்சர்லாந்து வெற்றி: கனடா வெற்றியை தடுத்தது நைஜீரியா

மெல்பர்ன்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. கனடா அணியின் பெனால்டி கிக்கை நைஜீரியா கோல்கீப்பர் சியாமகா நாடோசி அற்புதமாக தடுத்தார். இதனால் இந்த அணிகள் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது நாளான நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா - நைஜீரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் மெல்பர்னில் நடைபெற்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை