UA-201587855-1 Tamil369news இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: சவுத் ஷகீல் சதம் விளாசலில் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: சவுத் ஷகீல் சதம் விளாசலில் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சவுத் ஷகீல் விளாசிய சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.

காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 95.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 122 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை