UA-201587855-1 Tamil369news இநதய மகளர ஹகக அண அறவபப

இநதய மகளர ஹகக அண அறவபப

புதுடெல்லி: சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கு சிறந்த முறையில் தயாராகும் விதமாக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதன்படி ஜெர்மனி பயணிக்கும் இந்திய அணி அங்கு சீனாவுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுகிறது. தொடர்ந்து ஜெர்மனி அணிக்கு எதிராக 2 போட்டியிலும் இந்திய அணி மோத உள்ளது. இந்த 3 ஆட்டங்களும் ஜூலை 16 முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறது. அங்கு தென் ஆப்பிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் ஹாக்கி தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஸ்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஹாக்கி தொடர் ஜூலை 25 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை