சிட்னி: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியில் கொலம்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொலம்பியா வீராங்கனைகள் லிண்டா கேசிடோ, மேனுலா வனேகாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்ற ஆட்டங்களில் நார்வே அணி 6-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸையும், மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் தென் கொரியாவையும் தோற்கடித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்