UA-201587855-1 Tamil369news SL vs PAK | கொழும்பு டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

SL vs PAK | கொழும்பு டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

கொழும்பு: இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையே கொழும்பு நகரில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 57, தினேஷ் சந்திமால் 34, ரமேஷ் மெண்டிஸ் 27, திமுத் கருணரத்னே 19 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரார் அகமது 4, நசீம் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 6, ஷான் மசூத் 51 ரன்னிலும் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை