வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் செப்டம்பர் 21, 23 மற்றும் 26-ம் தேதிகளில் டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதி செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்