UA-201587855-1 Tamil369news பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து | சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்!

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து | சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்!

சிட்னி: நடப்பு பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்தின. இந்த கால்பந்து திருவிழா கடந்த மாதம் 20-ம் தேதி (ஜூலை) தொடங்கி இன்று (ஆகஸ்ட் 20) வரை நடைபெற்றது. மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை மேற்கொண்டன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. மொத்தம் 64 போட்டிகள். இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் மற்றும் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை