UA-201587855-1 Tamil369news பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் | காயத்ரி, ட்ரீசா ஜோடி முன்னேற்றம்

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் | காயத்ரி, ட்ரீசா ஜோடி முன்னேற்றம்

கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி சீன தைபேவின் சாங் சிங் ஹுய், யங் சிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயத்ரி, ட்ரீசா ஜோடி 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் இந்திய ஜோடி போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் ஷென் குயிங், ஜியா யி ஃபேன் ஜோடியை எதிர்கொள்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை