நடிகை சமந்தாவும்நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்தனர். பின்னர்கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுவிட்டனர். இருவரும் படங்களில் பிசியாகநடித்து வருகின்றனர். இந்நிலையில்கன்னடத்தில் வெளியான ‘ஹாஸ்டல் பாய்ஸ்’ திரைப்படம் தெலுங்கில் டப்செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு திரையிடல் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் நாக சைதன்யாவும் பங்கேற்றார்.
இடைவேளையின்போது ‘குஷி’ படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பானது. அதில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்துள்ள காட்சியைக் கண்டதும் திடீரென திரையரங்கில் இருந்து நாக சைதன்யா வெளியேறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் மற்ற வேலை காரணமாக பாதியில் வெளியேறினார் என்றும் சிலர் கூறுகின்றனர்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்