UA-201587855-1 Tamil369news கார்த்தி பட தலைப்பு ‘வா வாத்தியாரே’?

கார்த்தி பட தலைப்பு ‘வா வாத்தியாரே’?

சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது. கார்த்தியின் 26-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்ற தலைப்பு வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை