2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. கடந்த இரு உலகக் கோப்பைகளில் இருந்து 4 அணிகள் குறைக்கப்பட்டு 10 அணிகள் கலந்து கொண்டன.
விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் 6 வெற்றி, ஒரு தோல்வி, 2 முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றில் நுழைந்தது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்விகளுடனும் இங்கிலாந்து 6 வெற்றி, 3 தோல்விகளுடனும், நியூஸிலாந்து 5 வெற்றி, 3 தோல்விகளுடனும் (ஒரு முடிவில்லாத ஆட்டம்) அரை இறுதி சுற்றில் கால்பதித்தன. 5-வது முறையாக தொடரை நடத்திய இங்கிலாந்து அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது. மற்றொரு அரை இறுதியில் இந்தியா, நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்