சென்னை: நடிகை தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் எப்போது என்பது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, கூறியதாவது:
திருமணம் என்ற அமைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளத்தான் இருக்கிறேன். இப்போது அதற்கான மனநிலை இல்லை. நடிப்பு இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம். அதை அனுபவித்து வருகிறேன். அதனால் இப்போது திருமணம் இல்லை”என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்