UA-201587855-1 Tamil369news நடிகர் ராம் சரண் காயம்: கேம் சேஞ்சர் ஷூட்டிங் ரத்து

நடிகர் ராம் சரண் காயம்: கேம் சேஞ்சர் ஷூட்டிங் ரத்து

இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் ‘இந்தியன் 2’, ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வருகிறார். இதில் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம், தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராம் சரணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால், 10 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை