ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று (அக்.2) காலை ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலேவில் 2 வெண்கலம் வென்றது இந்தியா. ஆடவர் மற்றும் மகளிர் இந்திய ஸ்கேட்டிங் அணியினர் வெண்கலம் வென்றுள்ளனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 தங்கம் உள்பட 15 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இந்த சூழலில் இன்று காலை ஸ்பீட் ஸ்கேட்டிங் விளையாட்டில் இரண்டு வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்