UA-201587855-1 Tamil369news இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை நெருங்கும்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை நெருங்கும்

தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகின்றன. இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 10 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக்கொள்ளும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை