UA-201587855-1 Tamil369news “கைகள் இல்லை; ஆனாலும் தன்னம்பிக்கைக்கு குறைவில்லை” - நெட்டிசன்கள் கொண்டாடும் ஷீதல் தேவி

“கைகள் இல்லை; ஆனாலும் தன்னம்பிக்கைக்கு குறைவில்லை” - நெட்டிசன்கள் கொண்டாடும் ஷீதல் தேவி

ஹாங்சோ: 4-வது பாரா ஆசிய விளையாட்டி போட்டிகளின் முடிவில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும்.

இந்த போட்டியில், 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஷீதல் தேவி. 16 வயதே ஆன இவர், வில்வித்தையில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது, நடப்பு போட்டி தொடரில் பெற்ற 3-வது பதக்கமாக அமைந்தது. முன்னதாக காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை