புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டி முடிந்ததும் ஆப்கன் ரசிகர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்திருந்தனர்.
புள்ளிகள் பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் உள்ள ஆப்கன். 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என முன்னாள் உலக சாம்பியன்களை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்