ஹைதராபாத்:ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
1996-ம் ஆண்டு உலக சாம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்முறை பாபர் அஸம்தலைமையில் களமிறங்குகிறது. இந்திய மண்ணில்அந்த அணி 7 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் விளையாட உள்ளது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், 14-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தக்கூடும் என கருதப்படுகிறது. இருப்பினும் கடந்த 2019-ம்ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் செய்த தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தக்கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்