UA-201587855-1 Tamil369news டிசம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள்

டிசம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள்

புதுடெல்லி: வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைபெறும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350-க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை