UA-201587855-1 Tamil369news நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சைவெற்றி: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா!

நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சைவெற்றி: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா!

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தனது 50-வது சதத்தை விளாசிவரலாற்று சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 13-வது பதிப்பின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகின்றன. தொடரை நடத்தும் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் இன்று மோதுகிறது. நடப்பு தொடரில் இந்திய அணி 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. இதனால் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வெற்றியுடன் நிறைவு செய்வதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை