UA-201587855-1 Tamil369news இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ‘கங்குவா’ 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ‘கங்குவா’ 

சென்னை: நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு, இந்தி நடிகர் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆக் ஷன் காட்சிகள் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தன. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே தொடங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை