UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அரை இறுதிக்குதகுதி பெற்று விட்டது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பெற்ற 6 வெற்றிகளும் முதலில் பேட் செய்த ஆட்டங்களில் கிடைக்கப் பெற்றதாகும். நெதர்லாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணிஇலக்கை துரத்திய நிலையில் தோல்விகளை சந்தித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை