UA-201587855-1 Tamil369news டி20-ல் நியூஸி.யை வீழ்த்தியது வங்கதேசம்

டி20-ல் நியூஸி.யை வீழ்த்தியது வங்கதேசம்

நேப்பியர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 48, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 23, ஆடம் மில்ன் 16, டேரில் மிட்செல் 14 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் மெஹிதி ஹசன், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை