UA-201587855-1 Tamil369news கே.எல்.ராகுல் சதத்துடன் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: டீன் எல்கரின் விளாசலில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை

கே.எல்.ராகுல் சதத்துடன் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: டீன் எல்கரின் விளாசலில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்குஆட்டமிழந்தது.

செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 5, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, ஷுப்மன் கில் 2, ஸ்ரேயஸ் ஐயர் 31, விராட் கோலி 38, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, ஷர்துல் தாக்குர் 2, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை