UA-201587855-1 Tamil369news தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் | தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி: மகளிர் அணிக்கு வெண்கலம்

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் | தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி: மகளிர் அணிக்கு வெண்கலம்

லூதியானா: 73-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள குருநானக் தேவ் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் தமிழக அணி தங்கம் வென்றது. மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலம் வென்றது.

இறுதிப் போட்டியில் ரயில்வே ஆடவர் அணியை 72-67 என்ற கணக்கில் வீழ்த்தியது தமிழக அணி. மகளிர் பிரிவில் ரயில்வே அணி கேரளாவை வீழ்த்தி தங்கம் வென்றது. தங்கம் வென்ற அணிக்கு ரூ.5,00,000 பரிசு வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில் மூன்றாவது இடத்தை தமிழக அணி பிடித்து, வெண்கலம் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை