UA-201587855-1 Tamil369news நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு - ரசிகர்கள் இரங்கல்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு - ரசிகர்கள் இரங்கல்

சென்னை: கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். அவருக்கு வயது 60.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான 'தனிமை' படத்தில் நடித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை