UA-201587855-1 Tamil369news சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பாட்னா பைரேட்ஸுடன் தமிழ் தலைவாஸ் இன்று மோதல்

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பாட்னா பைரேட்ஸுடன் தமிழ் தலைவாஸ் இன்று மோதல்

சென்னை: புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை நகர போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று (22-ம்தேதி) முதல் வரும் 27-ம் தேதி நடைபெறுகின்றன. சென்னை கட்ட போட்டிகளில் மொத்தம் 11 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இன்று இரவு 8மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் 4 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் புரோ கபடி லீக்தொடரின் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் 11-வது இடத்தில் உள்ளது. எனினும் மற்ற அணிகளை விட தமிழ்தலைவாஸ் குறைந்த ஆட்டங்களிலேயே விளையாடி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை