விஜயவாடா: ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ராமகோட்டையா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த யுடிடி தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த மானவ் தாக்குர் 4-2 என்ற கணக்கில் ஜி.சத்தியனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் பிரிவில் ஆர்பிஐ அணியைச் சேர்ந்த ஸ்ரீஜா அகுலா 4-3 என்ற கணக்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த அர்ச்சனாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்