சென்னை: சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வியாழக்கிழமை இரவு 10.35 மணி அளவில் நடிகர் விஜய் வந்தார். விஜயகாந்த் உடலை பார்த்து கண்கலங்கியபடி சில நிமிடங்கள்நின்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதாவுக்கும், அவரது மகன்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். திரும்பி செல்லும்போது, மீண்டும் சில நிமிடங்கள் விஜயகாந்த் உடலை பார்த்து கண்கலங்கியபடி விஜய் சென்றார்.
அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் அவரால் தன்னுடைய காருக்கு செல்ல முடியவில்லை. போலீஸார் மற்றும்பவுன்சர்கள் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.விஜயகாந்த் உடலுக்கு விஜய்கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்திய வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்