UA-201587855-1 Tamil369news IND vs AUS | 5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி: 4-1 என தொடரை வென்றது!

IND vs AUS | 5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி: 4-1 என தொடரை வென்றது!

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயஸ் ஐயர் 53 ரன்கள், அக்சர் படேல் 31 ரன்கள், ஜிதேஷ் சர்மா 24 ரன்கள் மற்றும் ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்திருந்தனர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை