UA-201587855-1 Tamil369news அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் சுழலில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் சுழலில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஹைதராபாத்: எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கட் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 11.5 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரவிச்சந்திரன் அஸ்வின் பிரித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை