UA-201587855-1 Tamil369news மலேசிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார். ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 12-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தனது 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், முன்னாள் உலக நம்பர் ஒன் வீரரான ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன் மோதுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை