UA-201587855-1 Tamil369news அலெக்சாண்டரை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார் சுமித் நாகல்

அலெக்சாண்டரை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார் சுமித் நாகல்

மெல்பர்ன்: 2024-ம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், ஜப்பானின் யோஷிடோநிஷியோ காவை எதிர்த்து விளையாடினார். இதில் ஹோல்கர் ரூன் 6-2, 4-6, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

11-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் அல்பர்ட் ரமோஸையும், 13-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 4-6, 6-3, 7-6 (7-1), 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸையும், 19-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரி 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் பெருவின் ஜுவான் பாப்லோ வாரிலாஸையும், 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் கிரிகோயர் பாரேரையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை