புதுடெல்லி: இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர். டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 30-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், சகநாட்டைச் சேர்ந்தவரான லக்சயா செனுடன் மோதினார்.
75 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 16-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் 21-6, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் டியன் செனை தோற்கடித்தார். பிரணாய் தனது 2வது சுற்றில் பிரியன்ஷு ரஜாவத்துடன் மோதுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்